4 Mar 2022

தோன்றாப் பறவை

தோன்றாப் பறவை

இன்று தோன்றாத பறவை

மனவானில் சிறகடித்துக் கொண்டிருக்கிறது

அரூபமாய் வந்து விட்ட பறவையை

நிஜத்தில் காண காத்திருப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது

இன்னும் சற்று நேரத்தில் வந்து விடலாம் என்ற எதிர்பார்ப்பு

வராமலும் போகலாம் என்ற சாத்தியத்தை நிராகரித்து விட்டு

வெறித்துப் பார்த்தபடி இருக்கிறது

காத்திருப்பின் கணங்கள்தான் வாழ்க்கையோ என

ஒரு தெறிப்பு அலை மோதியபடி செல்கிறது

சாத்தியமாகும் நம்பிக்கையின் கரங்களைப் பிடித்தபடி

காலம் நகர்கையில்

பறவையின் வருகையினும்

வராமல் போகும் நிகழ்வு

காவியப் பொருண்மையில் படிந்த படிமமாகிறது

எதிர்பார்ப்பை ஏமாற்றிய பறவை

வேறு யாரோ ஒருவரின் எதிர்பார்ப்பை

நிறைவேற்றியிருக்கவும் கூடும்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...