11 Mar 2022

ஆழ்கடலின் அலைகள்

ஆழ்கடலின் அலைகள்

எதுவும் தவறாகி விடக் கூடாது என்ற அச்சம்

ஆழ்கடலில் அலைகள் உண்டாவதைப் போல்

எவ்வளவு அச்சம் நிலவினும்

ஏதோ ஒன்று தவறாகத்தான் செய்கிறது

தவறுகள் காற்று அலைக்கழிக்கும் துரும்பைப் போல்

சுழற்றி எடுத்து நிலைகுழையச் செய்கின்றன

கூடவே குழந்தையை அடித்து விட்ட தந்தை ஒருவர்

இனிப்புகளோடு இல்லம் திரும்புவதைப் போல்

பாடங்களை அள்ளித் தந்து விட்டுப் போகின்றன

காலங்கள் கடக்க கடக்க

தவறுகள் அதுவாக நிகழ்ந்து அதுவாகச் சரியாவது புரிவதற்குள்

கருமுடிகள் வெள்ளைப் பற்களைக் காட்டிச் சிரிப்பதைப் போல்

வெண்முடிகளை தலைகோதிச் செல்கின்றன

இப்போது தவறுகள் சிநேகம் கொள்ள ஆரம்பித்து விட்டன

ஆரம்பம் அப்படியில்லை

ஒவ்வொரு தவறுகளுடன் இருந்த விரோதத்தை நினைக்கும் போது

தவறுகளைக் கட்டியணைத்து முத்தமிடத் தோன்றுகிறது

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...