1 Mar 2022

பெயர் ஒன்று உண்டு

பெயர் ஒன்று உண்டு

ஒரு ஜாம்பியோ டிராகுலாவோ

எதுவென்று தெரியாத ஒன்று என்னைக் கடித்தது

கடித்தலின் தொடர்ச்சியாக

பலரை நான் கடித்து வைக்கத் தொடங்கினேன்

கடிபட்டவர்கள் ஒவ்வொருவரும்

இன்னொருவர் இன்னொருவர் என்று

பலரைக் கடித்து வைக்க

இந்த உலகம் ஜாம்பிகளின் உலகமாகவோ

டிராகுலாவின் உலகமாகவோ ஆனது

என்னைக் கடித்த ஜாம்பியோ டிராகுலாவோ

எதுவென்ற தெரியாத அதை

ஒருநாள் எதேச்சையாய்ச் சந்தித்த போது

பெயர் என்னவென்று கேட்டேன்

சுயநலம் என்றது

சத்தியமாக உன் பெயர் ஜாம்பி இல்லையா என்றேன்

இல்லை என்றது

சத்தியமாக உன் பெயர் டிராகுலாவும் இல்லையா என்றேன்

இல்லை என்றது

சத்தியமாகத் தன் பெயர் சுயநலம்தான் என்றது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...