12 Feb 2022

சுழலும் இந்த வாழ்வு

சுழலும் இந்த வாழ்வு

உலகம் பழையதாகிக் கொண்டிருக்கிறததோ

புதியதாகிக் கொண்டிருக்கிறதோ

உலகைப் பார்த்தால் எதுவும் தெரிகிறதோ

அது அதுவாக இயங்கிக் கொண்டிருக்கிறது

வெறுமனே நாம் இருந்தாலும்

உலகம் ஏனோ சுழன்று கொண்டிருக்கிறது

பருவம் தப்பிப் பொழியும் மழைக்காக என்ன செய்வது

நீளும் கொடையைத்தான் என்ன செய்வது

திடீரென ஒரு நாள் பெய்யும் பனி

நண்பகலின் உக்கிர வெயிலுக்கு அறிகுறி

வகுக்கப்படும் சீரிசை விதிகள் தகர்க்கப்படும் போது

புதுப்புது சீரிசை விதிகள் உண்டாகும்

அறிதலுக்குப் பின் எந்த விதியும் நிலைப்பதேது

விதிகளை அறிவதிலோ அறியாமல் இருப்பதிலோ

கண்டு கொள்ளாமல் சுழலும் இந்த வாழ்வு

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...