13 Feb 2022

வெண்சுருட்டின் புகைமிகு வாசம்

வெண்சுருட்டின் புகைமிகு வாசம்

பெட்டிக்கடை முழுவதும் நிறைந்திருக்கிறது

வெண்சுருட்டின் புகைமிகு வாசம்

குழந்தைகள் மிட்டாய்கள் வாங்குவதற்காய் நிற்கின்றன

முதியவர் ஒருவர் வெற்றிலைப் பாக்கிற்காய்க் காத்திருக்கிறார்

தாக சாந்தியின் பொருட்டு

தண்ணீர் போத்தலுக்காகக் காத்திருப்பவரும் அங்கிருக்கிறார்

குளிர்பானம் வேண்டி நிற்பவரும்

கால் கடுப்பைப் பொறுத்துக் கொண்டிருக்கிறார்

பெட்டிக்கடைக்காரரின் இரு கரங்கள் பலவிதமாய்ச் சுழல்கின்றன

தகிப்பில் ஒவ்வொருவரும் ஆசுவாசம் இழக்கின்றனர்

எல்லார் தகிப்பையும் உள்ளிழுத்துக் கொண்டு

புகை விடும் வெண்சுருட்டு ஊதுபவர் ஆசுவாசம் கொள்கிறார்

அனைத்தையும் உள்ளிழுத்துக் கொண்டு

ஆசுவாசம் கலையாமல் ஒவ்வொருவர் தேவைக்காகவும்

ராட்டினக் கால்களில் சுழல்கிறார் பெட்டிக்கடைக்காரர்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...