12 Feb 2022

சேமிப்பில் உறையும் நினைவுகள்

சேமிப்பில் உறையும் நினைவுகள்

சேமிப்பிற்கு அளவேது

கறையான்கள் தின்றது போக

மீந்திருக்கு நினைவுகள் மறதிகள் தின்பதற்காக

சேமித்துக் கொண்டே போகும் வழியில்

முதுமை வந்து வழிப்பறி செய்கிறது

சேமிப்பை அம்போவென்று விட்டுச் செல்லும்

தைரியமின்றி கலங்கும் மனதுக்கு யார் ஆறுதல் சொல்வது

ஆறுதலுக்காக நெற்றியோடு வரும்

ஒற்றைக்காசு நடுவழியில் உதிர்ந்து ஏமாற்றுகிறது

மிஞ்சியிருக்கும் சேமிப்பை

எவரெவர் எடுத்துக் கொண்டாலும்

கைநழுவும் தருணங்களே சேமிப்பின் குணாதிசயம்

சேமிப்பு உறிஞ்சிக் கொண்ட

பட்டினிகளுக்கும் பரிதாபங்களுக்கும்

புண்ணியம் ஒன்றே பிராயச்சித்தம்

அவரவர் சேமிப்புக் கணக்கு ரகசியமானது

அவரவர்க்கே தெரியும் சேமித்த பொருள்

சேமிப்பை யாரும் எடுத்துச் செல்ல முடியாது என்பது

புண்ணிய கணக்குக்குப் பொருந்தாது

என்றோ ஒரு நாள் சோறிட்டதை

இன்றும் சொல்லிச் சொல்லி ஒப்பித்துக் கொண்டிருக்கிறான்

காலத்தேவக் கிழவன்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...