12 Feb 2022

முழுமை மட்டும் அறிந்த ரகசியம்

முழுமை மட்டும் அறிந்த ரகசியம்

காலத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறேனா

அப்படித் தோன்றுவில்லை

காலம்தான் தேர்ந்தெடுத்திருக்கிறது

காலம் பெற்றெடுத்த சிறுகுழந்தை பிறவிகள்

எல்லைகளைப் புரிந்து கொள்வது ஒரு தோற்றம்

தோற்றத்தை மறைத்து விரிவன எல்லைகள்

எல்லைகளோ எல்லை இல்லாதது என்பதை அறிவதேது

இருட்டு முழுவதையும் வெளிச்சமாக்கி விட்டதாக நினைக்கும்

வெளிச்சம் ரொம்பவே சிறிது

இருண்மை பெரிது என்பதற்காக வெளிச்சம் சோர்ந்திடாது

அடக்கத்திற்காக எதுவும் சொல்லப்படுவதில்லை

உண்மையின் அடக்கமே இதுதான்

முழுமையை எப்போதும் நிரம்பாது

முழுமையின் ஒரு சிறு பகுதியை நிரப்புவதாகத் தோன்றலாம்

எப்போது எதையிட்டு நிரப்ப வேண்டும் என்பது

முழுமை மட்டுமே அறிந்த ரகசியம்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...