13 Dec 2021

இன்னொன்றில் இருக்க நிர்பந்திக்கப்பட்டு இருப்பவர்கள்

இன்னொன்றில் இருக்க நிர்பந்திக்கப்பட்டு இருப்பவர்கள்

ஆச்சரியங்கள் வேண்டுமானால்

கண்ணில் படும் எழுத்துகளை மட்டும் புரட்டுங்கள்

அதிசயங்கள் வேண்டுமானால்

கடவுளர்களின் நிறுவனங்களில் புகுந்து கொள்ளுங்கள்

பொழுதுபோக்கு வேண்டும் என்றால்

அமைப்புகளின் ஊடகங்களில் உறைந்துப் போகுங்கள்

உண்மைகள் வேண்டும் என்றால்

மறைத்து வைத்துக் காட்ட வேண்டும் என்ற

சூட்சமத்தைப் புரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் நீங்களில் இருப்பதற்கில்லை

இன்னொன்றில் இருக்க நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறீர்கள்

நிர்பந்தங்களுக்குள் வாழ மட்டும் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறீர்கள்

இதை மறுப்பீர்களானால் நீங்கள் சபிக்கப்பட்டு இருக்கிறீர்கள்

*****

2 comments:

  1. நிதர்சனம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...