4 Oct 2021

தமிழ்த் திரையில் பெண் வாரிசுகள்

தமிழ்த் திரையில் பெண் வாரிசுகள்

            இயக்குநர் ஷங்கரின் மகள் நடிக்க வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டேன். திரைத்துறையில் இருப்பவர்கள் மகனை நடிக்க வைக்க முயற்சிக்கும் அளவுக்கு மகளை நடிக்க வைக்க அனுமதிக்க மாட்டார்கள். ஷங்கர் அந்த விசயத்தில் பாராட்டப்பட வேண்டியவர்.

கமலும் பாராட்டப்பட வேண்டியவர்தான். இரண்டு மகளையுமே நடிக்க அனுமதித்திருக்கிறார். அதிலும் ஸ்ருதி ஹாசன் நடிப்பிற்கு அவர் வழங்கியிருக்கும் சுதந்திரம் தனித்துவமானது. எந்த ஒரு தந்தையாலும் அப்படி ஒரு சுதந்திரத்தைத் தர முடியாது.

ஆனந்தன் என்ற ஒரு நடிகர் இருந்தார். கத்திச் சண்டையில் வல்லவர். சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கக் கூடியவர். புலியுடன் கூட டூப் போடாமல் சண்டை போட்டு நடித்திருக்கிறர். விஜயபுரி வீரன், வீரத்திருமகன் போன்ற படங்களில் கதை நாயகன் இவர்தான். யார் இந்த ஆனந்தன் என்று நீங்கள் யோசித்தால்… வீரத்திருமகன் படத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற பாடலான “ரோஜா மலரே ராஜ குமாரி” என்ற பாடலில் நடித்திருப்பாரே அவர்தான் ஆனந்தன். ரொம்ப ரம்மியமான பாடல் அது. அந்தப் பாடலைக் கேட்க கீழே சொடுக்கவும்.


ஆனந்தனின் மகள்தான் டிஸ்கோ சாந்தி என்றழைக்கப்பட்ட சாந்தகுமாரி. ஒரு பாடலுக்கு ஆடும் துள்ளல் நடன நடிககையாகவே தமிழ்த் திரையுலகம் ஆனந்தனின் பெண் வாரிசைப் பயன்படுத்தியது. பிரபல்யம் குறைந்த நடிகராக இருந்தால் அவரது வாரிசைத் தமிழ்த் திரையுலகம் அப்படித்தான் பயன்படுத்தும் போலிருக்கிறது.

இதில் ரஜினிகாந்த் வித்தியாசமானவர். இரண்டு மகள்களையும் நடிக்க விடாமல் இயக்கம், தயாரிப்பு என்ற அளவோடு நிறுத்தி விட்டார். அவர் வழி எப்போதும் தனி வழிதான். அநேகமாகப் பேரன்களை கதாநாயகர்களாக நிலைநிறுத்த முயற்சிகளை எடுக்கலாம்.

மேற்படி விசயத்தில் நடிகர் அர்ஜூனும் பாராட்டப்பட வேண்டியவர்தான். அவரும் தன் மகளை நடிக்க வைத்திருக்கிறார்.  இந்தப் பாராட்டுக்கு மத்தியில் அவர் எப்படி மீ டூ பிரச்சனையில் சிக்கினார் என்ற கேள்வியும் மனதுக்குள் வந்து போகாமல் இருக்காது.

இதற்கு முன்பு நடிகை தேவிகாவின் மகள் கனகா, தேங்காய் சீனிவாசனின் பேத்தி போன்ற கலையுலகை சேர்ந்த பெண் வாரிசுகள் நடித்திருக்கிறார்கள். நடிகை ராதாவும் தன் மகளைத் தமிழ்த் திரையுலகல் நடிக்க வைத்திருக்கிறார். இப்படி நிறைய பேர் பிரபலமான பிற்பாடும் பெண் வாரிசுகளையும் நடிக்க வைத்திருப்பார்கள். உங்களுக்குத் தெரிந்தவைகளைச் சொன்னால் நிறைய சுவாரசியமான தகவல்கள் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.

*****

No comments:

Post a Comment

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா?

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா? தமிழகம் பலவற்றில் முன்னேறி வருகிறது. படித்தவர்களின் எண்ணிக்கை, பணக்காரர்களின் எண்ணிக்கை, தொழி...