30 Oct 2021

கனவும் கனவு நிமித்தமும்

கனவும் கனவு நிமித்தமும்

கனவில் கொலை செய்தவரை

நேரில் பார்க்கையில் பீதியாய் இருக்கிறது

சங்கதி வெளியானால் நிலைமை என்னாவது

நீங்களும் என்னைக் கனவில் கொன்று விடுங்கள் என்று

அவரிடம் சென்று மன்றாடுகிறேன்

புரியாமல் விழிப்பவர் கொஞ்சம் நிதானித்து

நெற்றியைச் சுருக்கியபடி பைத்தியம் எனக் கடந்து செல்கிறார்

யாருக்குத் தெரிந்தால் என்ன

தெரியாமல் இருந்தால் என்ன

கடவுளுக்குத் தெரியும்

கடவுள் என்னை நரகத்தில் தள்ளுவார் என நினைத்தால்

அற்றை நாள் கனவு சம்போகங்களால் நிறைகிறது

சம்போகம்தான் நரகமோ என்னவோ

சம்போகித்தவரை நேரில் பார்க்கையில்

பேரதிர்ஷ்டமும் பெருமகிழ்வுமாய் இருக்கிறது

அவரிடம் சென்று எப்படிச் சொல்வது

உங்கள் கனவில் வரலாமா என்று கேட்டு வைக்கிறேன்

கொன்றாலும் கொன்று விடுவேன் என்று

புன்னகைத்தபடிச் சொல்லிச் சென்றவரை

நிலைகுத்திய கண்களோடு கொலையுண்டவனைப் போல

கனவுகள் உறைந்த கால வெளியில் பார்த்தபடி நிற்கிறேன்

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...