3 Oct 2021

என்ன ஒரு யோசனை!

என்ன ஒரு யோசனை!

            இந்த வேலையாவது கிடைக்க வேண்டும் என்று ஒண்டிப்புலி ஐயனாருக்கு வேண்டிக் கொண்டு வந்த சிங்கப்பெருமாளுக்கு இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை வேலைக்காக வரிசையில் நின்றவர்களைப் பார்த்த போது மயக்கம் வந்து விடும் போலிருந்தது. பேசாமல் இந்த வேலைக்குப் போவதை விட இந்தக் கூட்டத்தை வைத்து நாமே வேலை தேடிக் கொள்வது என்று முடிவெடுத்தவன் பக்கத்துக் கடையை நோக்கி வேகமாக நடந்தான்.

கடையில் பேசி வாங்கிக் கொண்ட ஒரு டிரேயில் வைத்தபடி, “தாகத்துக்குத் பாதுகாப்பான தண்ணீ பாக்கெட்டு. தொண்டைக்கு இதமா குளிர்ச்சியான கூல் டிரிங்ஸ். நீங்க இருந்த எடத்துல இருந்துக்கிட்டே தாகம் தீர்த்துக்கலாம். குளிர்ச்சியா குடிச்சிக்கலாம்.” சிங்கப்பெருமாளின் சத்ததுக்கு நல்ல பலன் இருந்தது.

அடுத்த ரெண்டு மணி நேரத்தில் ரெண்டாயிரம் தண்ணி பாக்கெட்டு, ஆயிரம் கூல் டிரிங்ஸ் விற்ற வகையில் கமிஷன் காசு கையில் சுளையா தொள்ளாயிரத்து அம்பது சிங்கப்பெருமாளின் கையில் இருந்தது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...