2 Oct 2021

சாதனை மனிதர்கள் ‘பஞ்ச்’ பேசுவார்கள்!

சாதனை மனிதர்கள் ‘பஞ்ச்’ பேசுவார்கள்!

ஜெயலலிதாவின் பயோபிக் படமான ‘தலைவி’ பயோபிக் படத்தைப் பற்றி எழுதியிருந்ததைப் பார்த்து விட்டு கணித மேதை ராமானுஜம் பற்றிய பயோபிக் படமான ‘ராமானுஜன்’ ஐ விட்டு விட்டீர்களே என்றனர் பலரும்.

அரசியல், சினிமா மீது இருக்கும் ஆர்வம் கலை மற்றும் அறிவியல் மீது நமக்குக் குறைவுதான். சினிமாவும் கலையென்றாலும் அது வேறு விதமான கலை. முற்றிலும் வியாபாரத்தின் நிழலில் வளரும் கலை.

            ‘ராமானுஜன்’ படம் முக்கியமான படம். ஞான ராஜசேகரன் இயக்கிய படம். பெரியார் மற்றும் பாரதி படத்தையும் அவர்தான் இயக்கியிருக்கிறார். பயோபிக் சினிமா எடுப்பதற்குக் காரணம் அவரது ஆளுமையின் வீச்சு வெகுஜனப்பட வேண்டும் என்பதுதான். ‘ராமானுஜன்’ படம் பரவலாகப் பார்க்கப்பட்டது. ஆனால் பாட்ஷா, கில்லி, வாலி போன்று பரவலாகப் பார்க்கப்பட்டதா என்றால் அப்படிச் சொல்ல முடியாது.

            பயோபிக் என்று பார்த்தால் தில்லையாடி வள்ளியம்மை பற்றி, வேலுநாச்சியார் பற்றி, ஜி.டி.நாயுடு பற்றி, உ.வே.சா. பற்றி, கக்கன்  பற்றியெல்லாம் நிறைய எடுக்க வேண்டியிருக்கிறது.

            நம் மக்கள் அவற்றைப் பார்க்க வேண்டுமே என்ற கவலை எப்போதும் திரைத்துறைக்கு உண்டு என்பதால் அது போன்ற முயற்சிகளில் நம் திரைத்துறை ஈடுபடாது என அடித்துச் சொல்லலாம். இங்கு இருக்கும் இயக்குநர்களுக்கு ரஜினி, கமல், விஜய், அஜித் என்று கதை பண்ணவே நேரம் பத்த மாட்டேன்கிறது என்பதால் அது போன்ற முயற்சிகள் நடப்பதற்கான சாத்தியங்கள் தமிழ்த் திரையுலகல் இல்லவே இல்லை.

            இந்த மக்கள் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்க மாட்டார்கள் என்பதில் தமிழ்த் திரையுலகம் ரொம்ப தெளிவாக இருப்பதால் உணர்வு பூர்வமான படங்களை எடுத்துத் தள்ளுகிறது.

            டிக்கிலோனா, அனபெல் சேதுபதி என்றெல்லாம் படம் எடுத்துத் தள்ளுகிறார்கள். கால எந்திரமும் கால எந்திரத்தைத் தாண்டிய பேயும் முக்கியமாகி விட்டன. அதனால் தமிழ் மண்ணின் சாதனையாளர்கள் எல்லாரும் மறைந்து போய் விட்டார்கள். திரையில் பஞ்ச் வசனம் பேசும் நாடக மனிதர்களே சாதனையாளர்களாக ஆகி விட்டார்கள்.

*****

No comments:

Post a Comment

திராவிடமா? தமிழ்த் தேசியமா?

திராவிடமா? தமிழ்த் தேசியமா? ஓர் அரசியல் பண்பாட்டு இயக்கத்திற்கான வலுவான அடிப்படை கருத்தியல்தான். அந்தக் கருத்தியல் அடிப்படையில்தான் தங்கள்...