பெருநகரத்துப்
பெருவனம்
ஒரு நொடி இதயம் நின்றதை
உணர முடிந்தது
ஒட்டு மொத்த உலகம்
ஸ்தம்பித்ததாய்த் தோன்றியது
உலகம் இயங்கிக் கொண்டுதான் இருந்தது
உதிரும் இலைகளை வேடிக்கைப் பார்ப்பதைத்
தவிர
மரத்தால் என்ன செய்து விட முடியும்
கடைசி இலை உதிர்ந்து பட்டுப் போகும்
போதும்
தனக்குத் தானே தண்ணீர் ஊற்றிக் கொள்ள
முடியாது
அலுப்பு சலிப்பின்றி நிற்கும் மரம்
வேர்களைத் துழாவி விட்டுப் பார்க்கலாம்
அக்கம் பக்கம் கிளைகளை நீட்டிப் பார்க்கலாம்
அதிகபட்சம் ஓரடித் தாண்டி முன்னே வைத்து
விட முடியாது
பறவைகளும் பூச்சிகளும் வருவது நின்ற
பிறகும்
கறையான வந்து அரிக்கும் வரை
மரம் நின்றாக வேண்டும்
என்னதான் செய்வது
பெருநகரத்தில் பெருவனமாகி விட்ட
முதியோர் இல்லத்தில் நிற்கின்ற
முது மரங்கள் பல்லாயிரம்
*****
No comments:
Post a Comment