3 Sept 2021

ஆம்பளை பொம்பளை

ஆம்பளை பொம்பளை

தாலி கட்டினால் பிள்ளை பிறக்கும் என்றிருந்தவளைப்

புணர்ந்தால்தான் பிள்ளை பிறக்கும் என்று தேற்றினாய்

பிறிதொரு இரவில் பிள்ளை வேண்டும் என்றவளிடம்

ஒன்றுக்கு மேல் கூடாது என்று கண்டிப்பு காட்டினாய்

போதும் பிள்ளை என்றிருக்க செய்தவளை விடுத்து

பிறிதொருத்தியைக் கர்ப்பமாக்கித் தலைமறைவானாய்

கண்டுபிடிக்க முடியாத காலம் முழுவதும்

கண்டபடி புணர்ந்தபடி வாழ்ந்திருக்கிறாய்

இப்போதும் உனக்காக வீடடைந்து கிடப்பவளை

அதற்கு மேல் புணரக் கூடாது என்பதற்கு

என்ன மாய மந்திரம் போட்டாய்

என்பதை மட்டும் உரக்க சொல்லி விடு

என்ற போது

நாம் ஆம்பளை என்றாய்

அவள் பொம்பளை என்றாய்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...