2 Sept 2021

பெரும்பூதங்களும் சிறுபூதங்களும்

பெரும்பூதங்களும் சிறுபூதங்களும்

வானும் பூமியும் பெரும்பூதங்கள்

நீரும் காற்றும் நெருப்பும் சிறுபூதங்கள்

பெரும்பூதங்கள் சிறுபூதங்களை ஆட்டிப் படைக்கும்

நீரை ஆவியாக்கி இழுக்கும்

காற்றை அசைவித்து ஆட வைக்கும்

நெருப்பு அவற்றுக்கெல்லாம் துணை போக நேரிடும்

ஒரு நாள் சிறுபூதங்கள்

பெரும்பூதங்களை ஆட்டிப் படைக்கும்

வானை மின்னலாய்க் கிழித்து

அதன் காதுகளின் செவிகளை இடியிடியென இடித்து

பூமியைப் புயலாய்ச் சுற்றி

பூகம்பமாய்ப் புரளச் செய்து

பெரும்பூதங்கள் மாறாமல் இருக்கலாம்

சிறுபூதங்கள் மாற வைக்கும் மாற்றி வைக்கும்

பெரும்பூதங்களை மிரள வைக்கும்

சிறுதுரும்பு போதும் சிறுபூதங்களுக்கு

சின்னஞ்சிறியதொரு கிருமி போதும்

மனித இனத்தை ஆட்டி வைக்கவும்

சிறுபூதங்கள் நினைத்தால் எதையும் படைக்கும்

எதையும் உடைக்கும்

ஏனென்றால் அவை சிறுபூதங்கள்

பெரும்பூதங்கள் கட்டுபட்டே ஆக வேண்டும்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...