18 Sept 2021

கொரோனா கொரோனா கோ அவே

கொரோனா கொரோனா கோ அவே

வாத்தியாரிடம் கேட்டால்

கொரோனா தொத்திக்கும்

பள்ளியோடம் வாராதே என்பார்

அட அப்படின்னா வேலைக்குப் போனால்

பத்திக்காதுன்னுத்தாம்

என்னைப் பெத்த எங்கப்பன்

வேலைக்கு அனுப்பி வைக்குது

எச்சில் கிளாஸ் கழுவுறப்போ

பத்திக்காத கொரோனா

நாலு கடைக்கு டீக்கிளாஸ்ஸக்

கொண்டுப் போயிக் கொடுக்குறப்போ

பத்திக்காத கொரோனா

என்னடா வேலை செய்யுறேன்னு

முதலாளி மூஞ்சியில காரித் துப்புறப்போ

பத்திக்காத கொரோனா

பள்ளியோடம் போறப்பத்தாம் பத்திக்குதாம்

சரித்தாம் போன்னு

வாங்கி வெச்ச புத்தகத்தெ

மசால் வடை மடிக்க எடுத்துக்கிட்டுப் போனா

முதலாளிக்குச் சந்தோஷம்ன்னா சந்தோஷம்

என்னத்தாம் செய்வேம் சொல்லுங்க

கொரோனா இருக்குற வரைக்கும் வேலைக்குப் போறேம்

கொரோனா முடிஞ்சத்துக்கு அப்புறம்

பள்ளியோடம் போவேம்

கொரோனா கொரோனா கோ அவே

கம் அகைன் அனதர் இயர்ன்னு

அப்பைக்கப்போ பாடிப்பேன்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...