17 Sept 2021

அக்கறையாளனின் ரகசியம்

அக்கறையாளனின் ரகசியம்

ஆவி பிடி என்கிறாய்

சத்தான உணவு சாப்பிடு என்கிறாய்

மூலிகைகளை மொத்தமாய்

அரைத்துக் குடிப்பதைப் போல

தினம் தினம்

மூலிகைக் குறிப்புகள் சொல்கிறாய்

வெளியில் போக வேண்டாம் என்கிறாய்

தொட்டுப் பேசாதே என்கிறாய்

மணிக்கொருமுறை கையைக் கழுவு என்கிறாய்

நாளுக்கு இரு முறை குளி என்கிறாய்

நீ மட்டும் யாருக்கும் தெரியாமல்

சந்துத்தெரு வீட்டுக்குப் போய் வருவது

யாருக்கும் தெரியாது என்றா நினைக்கிறாய்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...