மனிதன் இருக்கும் வரை மருந்துகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பார்கள்!
‘தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்’ என்ற பழமொழி இந்தப் பாடு படக்
கூடாது. ஆங்கிலத்தில் இந்தப் பழமொழியை ‘Necessity is the mother of invention’ என்பார்கள்.
இந்த அடிப்படையில் கொரோனாவுக்கான மருந்தை அனைத்து நாடுகளும் அனைத்து மருந்து கம்பெனிகளும்
கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றன. வருங்காலத்திலும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும்.
பொதுவாக மனிதர்கள் இருக்கும் வரையில் மருத்துவ துறையில் மென்மேலும்
மருந்துகளைக் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அது மருத்துவ அறிவியலின் பண்பு.
அந்தக் கண்டுபிடிப்புகளுக்கு மனிதர்கள் இடம் கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள். இது
மனிதர்கள் செயற்கையாக வாழ்வதால் உண்டாகும் இடர்பாடு.
எல்லாவற்றையும் கண்டுபிடிக்கிறார்கள். கபசுர குடிநீரில் என்ன
பிரச்சனை என்பதை மட்டும் ஏன் கண்டுபிடிக்க மாட்டேன்கிறார்கள்? அதை மட்டும் கண்டுபிடிக்க
மாட்டார்கள். அது எளிமையான மருந்து. யார் வேண்டுமானாலும் அதை மெனக்கெட்டால் செய்து
விட முடியும். பெரிய முதலீடுகள் அதற்குத் தேவையில்லை. அதை எளிமையான மருத்துவ முறையாகக்
கொண்டு விடலாம்.
தடுப்பூசிகள் அப்படிப்பட்டதல்ல. அவற்றை விலையுயர்ந்த கருவிகளைக்
கொண்டு தயார் செய்ய வேண்டும். தயார் செய்ததைப் பதப்படுத்தப்பட்ட முறையில் கொண்டு வர
வேண்டும். அதை உட்செலுத்திக் கொள்ள மருத்துவ உதவிகள் தேவைப்படும். இதில் இருக்கும்
வணிகம் கபசுர குடிநீரில் இருக்கப் போவதில்லை. வாங்கிக் காய்ச்சிக் குடித்து விட்டால்
வேலை முடிந்து விட்டது.
விபத்து நேரிடுகையில், உடல் பாகங்கள் சிதைவுறுகையில் ஆங்கில
மருத்துவம் கைகொடுப்பதைப் போல வேறு மருத்துவம் கைகொடுக்க முடியாது. அதே நேரத்தில் ஆங்கில
மருத்துவம் குணப்படுத்தும் எலும்பு முறிவை வெகு விரைவாகவும் மலிவாகவும் புத்தூர் கட்டு
மருத்துவம் குணப்படுத்தும்.
ஆங்கில மருத்துவத்துக்கு நிகரான விஷ முறிவு மருந்துகள் நாட்டு
மருத்துவத்தில் இருக்கின்றன. பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே கிடையாது
என்பதை ஆங்கில மருத்துவம் ஒப்புக் கொள்ளாது. சான்றாக டெங்குவையும், சிக்கன்குன்யாவையும்
அதனால் குணப்படுத்த முடியாது என்று அதனால் சொல்ல இயலாது. ஆனால் எவ்வளவு எளிதாக நிலவேம்பு
குடிநீரும், பப்பாளி இலைச்சாறும் அதைக் குணப்படுத்தும் என்று சொன்னால் நீங்கள் அதிசயத்துப்
போவீர்கள்.
ஆங்கில மருத்துவம் சர்க்கரை நோய்க்கான மருந்தின் வீரியத்தை அதிகரித்துக்
கொண்டே போய் இறுதியில் சிறுநீரகத்தைப் பாதிக்க செய்து விடும். சித்த மருத்துவ சூரணங்கள்
அந்தச் சர்க்கரை நோயை மிக எளிமையாகக் குணப்படுத்தும். அதை விட எளிமையான உணவு முறையும்
வாழ்க்கை முறையும் சர்க்கரை நோயை வரவே விடாது.
மருத்துவம் என்பது வேடிக்கை காட்டி வியாபாரம் செய்யும் ஒன்றாக
மாறிக் கொண்டு இருக்கிறது. தொலைக்காட்சிகளில் வெளியாகும் மருத்துவ மற்றும் மருத்துவமனை
விளம்பரங்களைப் பார்த்தால் இதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். நடைமுறையில் அச்சுறுத்தி
வியாபாரம் செய்வதில் அதாவது உயிர்பயத்தைக்
காட்டி வியாபாரம் செய்வதில் ஆங்கில மருத்துவம் முன்னணியில் இருக்கிறது. இந்த விடயத்தில்
ஆங்கில மருத்துவத்தை அடித்துக் கொள்ள முடியாது. அதன் மருந்துகளின் அடிப்படையே பக்க
விளைவுகளால் ஆளை அடித்துக் கொல்வதுதான். ஒருமுறை அல்லது முதல் முறை உங்களை விரைவாகக்
குணப்படுத்தியதற்காக நீங்கள் அதற்கு செஞ்சோற்றுக் கடனைத் தீர்த்துதான் ஆக வேண்டும்
என்றால் அக்கடனுக்கான இறுதி விலை உங்கள் உயிர்தான்.
ஓர் அவசரத்திற்கு ஆங்கில மருத்துவத்தைப் பயன்படுத்துவதோடு நிறுத்திக்
கொண்டு நாம் பாரம்பரியமான மருத்துவ முறைகளை நோக்கித் திரும்புவது அவசியம். மக்கள் நல
அமைப்புகளும் எது எதற்கு எந்த மருத்துவ முறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை
மக்களிடம் உண்டாக்கி ஒருங்கிணைந்த மருத்துவ முறைக்கு மருத்துவ உலகை மாற்ற வேண்டும்.
*****
No comments:
Post a Comment