11 Aug 2021

கால் மரத்துப் போன நீர்

கால் மரத்துப் போன நீர்

விடுவிக்கும் ஏதோ ஒன்று

இந்தப் பேச்சில் இருக்கலாம்

இந்த எழுத்தில் இருக்கலாம்

பேசிக் கொண்டே இருப்பதும்

எழுதிக் கொண்டே இருப்பதும்

ஆசைப்பட்டு அடைந்து விட்ட வாழ்வின்

விடுபடுதலுக்காக எனும் போது

அடைய ஆசை கொள்ளாத வாழ்வில்

பேச்சுமில்லை

எழுத்துமில்லை

அழகிய மெளனம் உறைந்து கிடக்கிறது

ஓடாத நீரின் பனிக்கட்டியைப் போல

*****

விடுபடல்

சில நொடிகளில்

சிக்கலான நூல்கண்டு

பல மணி நேரமாக

விடுபட்டுக் கொண்டிருக்கிறது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...