20 Aug 2021

மிச்சமிருக்கும் மனிதம்


 மிச்சமிருக்கும் மனிதம்

பல வீடுகள்

கட்ட முடியாத ஆற்றாமை

வாடகை வீடுகளில் தீர்கின்றன

வாடகை வீடென்றால் என்ன

அவைகளும் வீடுகளே

வீடு மாறிச் செல்லும் கொடுப்பினையை

வீடற்ற நிர்கதியை

வாடகை வீடுகளே தருகின்றன

ஹவுஸ் ஓனர்கள் ஒண்டியிருக்காத

வாடகை வீடுகள் அபூர்வமாய் வாய்க்கின்றன

அநேக வாடகை வீடுகள்

நகரங்களின் குடியிருக்கின்றன

மிகப் பெரும் வீடு கட்டி

குடியிருக்கும் நல்லவரை விட

சிறுவீடு கட்டி அதை ரெண்டாய்ப் பிரித்து

வாடகைக்கு விடும் சிடுமூஞ்சிக்காரர்

ஆகச் சிறந்த நல்லவராய்ப் படுகிறார்

வாடகைப் பாக்கிகளில்

கொஞ்சம் ஒட்டியிருக்கவே செய்கிறது

மிச்சம் இருக்கும் மனிதம்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...