18 Aug 2021

கொரோனாவுக்கு எதிரான இயற்கையான நோய் எதிர்ப்புப் பொருள்

கொரோனாவுக்கு எதிரான இயற்கையான நோய் எதிர்ப்புப் பொருள்

            கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலைப் பெறுவது குறித்து தற்போது இந்த உலகம் அதிகம் சிந்தித்து வருகிறது. தடுப்பூசியின் மூலமாக நோய் எதிர்ப்பாற்றலைப் பெறுவது அதில் ஒரு முறை என்றால் இயற்கையான உணவு முறையால் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கிக் கொள்வது மற்றொரு வகை.

            இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கிக் கொள்வதில் உள்ள சிறப்பம்சம் அதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்பதுதான். தற்போது நாம் நன்கு அறிந்த மூன்று முக்கியமான இயற்கையான பொருள்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

பொருள் 1

            பழங்காலத்திலிருந்து இளநீர் இயற்கையான பொருள் என்பதோடு அது ஒரு மருத்துவ குணமிக்க பொருளும் ஆகும். இளநீர் தற்போதைய குளுக்கோஸ் பாட்டில்களைப் போல முன்பிலிருந்து மருத்துவத்தில் பயன்பட்டு வந்திருக்கிறது. காய்ச்சல் இல்லாத நிலையில் சளியை முறிப்பதற்கு இளநீர் ஒரு முக்கியமான மருந்தாகும்.

பொருள் 2

            எலுமிச்சை இளநீரைப் போன்று இயற்கையான மற்றும் மருத்துவ குணமிக்க மற்றொரு பொருள் ஆகும். எலுமிச்சையில் உயிர்ச்சத்து – சி அடங்கியிருப்பதைத் தற்கால அறிவியல் ஆராய்ந்து ஏற்றுக் கொண்டுள்ளது. உடனடி உற்சாகம் தருவதற்கும் வயிறு செரிமானத்திற்கும் எலுமிச்சை சாறு முக்கியமான மருத்துவப் பொருள் ஆகும்.

பொருள் 3

            தேனின் மருத்துவ குணத்தைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேனில் அடங்கியிருக்கும் தாது மற்றும் சத்துப் பொருள்கள் உடலுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலைத் தர வல்லது.

            இந்த மூன்றிலும் அடங்கியிருக்கும் ஒரு முக்கியமான மருத்துவ செய்தி என்னவென்றால் இந்த மூன்றும் ஒன்றிணையும் போது அசாத்தியமான நோய் எதிர்ப்பாற்றலை உடலுக்கு வழங்குகிறது என்பதுதான்.

            அரை அளவு வெட்டப்பட்ட எலுமிச்சம் பழத்தை ஒரு தம்ப்ளர் இளநீரில் பிழிந்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி அளவு தேனைக் கலந்து நன்றாகக் கலக்கி மூன்று நாட்கள் குடித்தால் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகிறது.

            இந்த நோய் எதிர்ப்பாற்றலானது காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் போன்ற அனைத்து நோய்களுக்குமானது ஆகும். அத்துடன் இது கொரோனாவுக்கு எதிரான இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலையும் வழங்க வல்லது ஆகும்.

இது பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இது இளநீரில் தயாரிக்கப்படும்  எலுமிச்சை சாறு எனும் Juice வகைதான். சாதாரணமாகத் தயாரிக்கப்படும் எலுமிச்சை சாற்றில் இங்கு தண்ணீருக்குப் பதிலாக இளநீரும், சர்க்கரைக்குப் பதிலாக தேனும் சேர்த்துக் கொள்கிறோம்.

இதற்கான செலவு என்று பார்த்தால் அதிகபட்சம் ஐம்பது ரூபாயைத் தாண்டாமல் இருக்கலாம். மூன்று நாட்களுக்கும் நூற்றம்பைது ரூபாய் ஆகலாம். சொந்தமாக உங்களிடம் தென்னை மரம், எலுமிச்சம் மரம் இருந்து தேனை மட்டும் வாங்குவதாக இருந்தால் இன்னும் செலவு குறைவாகவும் ஆகலாம்.

மேலும் இந்த இளநீர் – தேன் – எலுமிச்சை பானமானது உடலுக்குத் தேவையான குளுமையையும் வயிற்றுக்குத் தேவையான செரிமான சக்தியையும் உடலுக்கும் தேவையான சுறுசுறுப்பையும் வழங்க வல்லது ஆகும்.

மூன்று நாட்கள் என்ற கணக்கு இல்லை. தினமும் இந்தப் பானத்தை தேநீர் அல்லது குளம்பிக்குப் பதிலாக எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும். இதற்கான முடிவு உங்கள் கையில்தான் இருக்கிறது. இயற்கையான ஆரோக்கியமான பானத்தை எடுத்துக் கொள்வதோடு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலைப் பெறவும் இது உதவும். மூன்று நாட்கள் குடித்துப் பார்த்தால் இதை ஆயுளுக்கும் விட மாட்டீர்கள். இதன் சுவையும் அப்படி உங்களை அவ்வளவு கவர்ந்து விடும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...