காணாமல் போன மொபைல்
காணாமல் போன மொபைல்
கனவுகளில் தட்டுபடுகிறது
எடுத்தவர் யாரென்ற ரகசியத்தை
சொல்ல மறுக்கிறது
ரீசார்ஜ் இல்லாமல் பேசலாம் என்கிறது
டேட்டா பேக்கேஜ் அன்லிமிடெட் என்கிறது
வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம்
பேஸ்புக் டிவிட்டரில் மணிக்கணக்கில்
இயங்கிக் கொண்டிருக்கிறது
மறுபடியும் வழக்கம் போல்
விழித்தவுடன் காணாமல் போகிறது
*****
கனவுகள்
விசித்திரமாய் எழும் கனவுகள்
ஒரு கவிதை எழுதியதற்குப் பின்
காணாமல் போகின்றன
அரூப இருட்டில்
கரைந்து போகும் நிழலைப் போல
*****
சிறப்பான வரிகள்
ReplyDeleteதொடர்ந்து வாசித்தும் நேசித்தும் பாராட்டும் பேரன்புக்கு மிக்க நன்றிகள் ஐயா!
Delete