16 Aug 2021

கொரோனா புரட்டிப் போட்டிருக்கும் ‘கலை மதிப்பு’

கொரோனா புரட்டிப் போட்டிருக்கும் ‘கலை மதிப்பு’

            கொரோனாவால் நிகழ்ந்திருக்கும் நன்மைகளுள் ஒன்றாக அது திரைப்படங்கள் மீதிருந்த மோகத்தை மாற்றிப் போட்டிருப்பதைக் குறிப்பிடலாம்.

            ஓ.டி.டி. தளங்களில் திரைப்படம் பார்ப்பது அதிகரித்திருக்கிறது என்றாலும் திரையரங்கள் உருவாக்கிய தாக்கத்திலிருந்து இது வேறானது. திரையரங்கங்கள் உருவாக்கிய பைத்தியக்காரதனமான கும்பல் உளவியலை இது வளர்க்கவில்லை.

            எப்படிப் பார்த்தாலும் திரையரங்கங்கள் அறிவார்ந்த மன்றங்களின் செயல்பாடுகளை முடக்கின எனலாம். கலை என்றால் அது திரைப்படம்தான் என்ற நிலையை அது உருவாக்கியது என்றும் குறிப்பிடலாம். அது அதிகார அரசியல் வரை கால் பதித்தது தமிழ் நாட்டின் துரதிர்ஷ்டம் எனலாம்.

            திரைப்படங்கள் உருவாக்கிய புத்திக் கோணலான ஒரு நிலைக்குச் சான்றாக ஆயிரம் ரூபாய்க்கு திரையரங்க சீட்டை வாங்குபவர் ஐம்பது ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்க யோசிப்பதைக் குறிப்பிடலாம். அப்படி ஒரு வித்தியாச மனநிலையைத் திரைப்படம் தமிழர்கள் மனதில் வளர்த்திருந்தது.

            உலக அளவில் அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் உருவாகும் இடங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதிகளவு திரைப்படங்கள் உருவாகி பேரளவு தமிழர்களின் அறிவார்ந்த தளத்தை அது பாதித்து விட்டது.

            நிகழ்காலத்தில் எந்த ஒன்றைச் சிந்தித்தாலும் திரைப்படம் சார்ந்து சிந்திக்கும் அளவுக்கு அது தமிழர்களின் மூளையை உருமாற்றம் மற்றும் மடைமாற்றம் செய்து விட்டது. திரையரங்கங்கள் மூடப்பட்டு இருப்பதால் மெல்ல அந்த நிலை மாறி வருவதாக நினைக்கிறேன்.

            உலகெங்கிலும் வெளியாகும் பல திரைப்படங்கள் அறிவார்ந்த தளத்தில் மேலும் மெருகு பெறும் போது தமிழகத்தில் மட்டும்தான் இன்னும் உணர்வார்ந்த தளத்தில் மூளையை மழுங்கடிக்கும் வகையில் திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

            தமிழர்களை பன்னெடுங் காலமாக உணர்வின் அடிமை நாய்கள் போல திரைப்பட உலகம் வைத்திருந்தது என்றால் அதை மிகைப்பட்ட கூற்றாக ஒதுக்கி விட முடியாது. நடிகர் நடிகையருக்கு கோயில் கட்டியது, ரசிகர் மன்றம் அமைத்ததோடு மட்டும் இக்கூற்றின் மிகைத்தன்மையை நோக்காமல் தமிழர்கள் எப்போதும் இரு துருவ நடிகர்களின் குழுக்களாய்ப் பிரிந்து அடித்துக் கொள்வது வரை மேற்காணும் மிகைக் கூற்றின் உண்மையை உற்று நோக்க வேண்டும்.

            மொத்தத்தில் இந்தப் பத்தியின் மூலமாக நாம் அடைய வேண்டிய முக்கியமான முடிவு என்னவென்றால், ‘திரைப்படம் என்ற ஒன்று இல்லாதிருந்தால் தமிழகம் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்’ என்பதுதான்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...