14 Aug 2021

கும்பல் குறிப்புகள்

கும்பல் குறிப்புகள்

இந்தப் பொருளாதாரம் எப்போது

லாபகரமாக இருக்கும்

எப்போது விவசாயம்

லாபகரமாக இருக்கிறதோ அப்போது

*****

விவசாயிக்கு முன்பெல்லாம்

மாடுகள் கன்று போட்டன

ஆடுகள் குட்டிப் போட்டன

கோழிகள் குஞ்சு பொரித்தன

இப்போதெல்லாம்

வட்டிகள் குட்டிகள் போடுகின்றன

*****

அட போங்கப்பு

எதை எதையோ விலை கொடுத்து வாங்கி

கடைசியில் ஓசியில்

கிடைத்துக் கொண்டிருந்த

தண்ணீரையும், காற்றையும்

விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது

விலை கொடுத்து வாங்கல் என்பது

பெரும் வியாதி

*****

அதென்னப்பா

கும்பல் கொலை

கும்பல் பலாத்காரம்

கூட்டுக் கொள்ளை

எதை எடுத்தாலும் கும்பலாகத்தான் செய்வீர்களோ

தனியாகச் செய்ய ஏதுமில்லையோ

பினாமி பெயரில் சொத்து சேர்ப்பது வரைக்கும்

*****

ஜோராக கை தட்டுங்கள்

வியாதிகளுக்குப் புதுப்புது

விளம்பரங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...