10 Aug 2021

அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆண்கள்

அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆண்கள்

            வலிமையுள்ளவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி விடுவார்கள். அந்த வலிமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உடல் வலிமையை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அறிவு வலிமையும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குக் காரணமாகி விடும்.

            பெண்களின் அறிவு வலிமையைக் குறைக்க வேண்டும் என்று நோக்கத்தோடு மிகப் பெருங்காலம் வரை ஆண்கள் பெண்களின் கல்வி பெறும் வாய்ப்பை முடக்கி வைத்திருந்தார்கள். அறிவில் அரசியலில் முன்னணியாக விளங்கிய நாடுகள் கூட பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் செயலை உடனே நிறைவேற்றி விடவில்லை.

            உடல் வலிமையில் ஆண் பெண்ணை விட சற்று முன்னேற்றம் அடைந்தவனாக இருக்கிறான். இருந்தாலும் ஒரு பெண் தாங்கும் பிரசவ வலியை ஆண் தாங்க முடியுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். வலியைத் தாங்கும் திறன் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம்.

            பெண் அறிவு வலிமை பெற்று விட்டால் ஆணைப் பின்னுக்குத் தள்ளி விட்டு அதிகாரத்திற்கு வந்து விடுவாள் என்பது ஆண்களுக்கு நன்றாகத் தெரியும். கடந்து பல ஆண்டுகளாக நடைபெற்ற பொதுத்தேர்வு முடிவுகளை எடுத்துப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். ஆண்களை விட பெண்கள் அதிகமாகத் தேர்ச்சி பெற்றிருப்பதோடு அதிக மதிப்பெண்களையும் பெற்றிருக்கிறார்கள்.

தற்காலத்தில் ஆண்களை விட பெண்களை நம்பி வேலைகளை ஒப்படைக்கும் போக்கும் அதிகரித்திருக்கிறது. பெண்கள் பொறுப்பாக வேலைகளைக் கையாள்வார்கள் என்ற நம்பிக்கை ஒரு காரணம்.

பெண்கள் எவ்வாறெல்லாம் ஒடுக்கப்பட்டார்கள் என்பதற்கு இப்போதும் கோயில்கள் ஒரு சாட்சியம். ஆண் தெய்வங்களுக்கு ஆண் பூசாரிகள் இருப்பதைப் போல பெண் தெய்வங்களுக்குப் பெண் பூசாரிகளை அனுமதிக்க மாட்டார்கள்.

நமது சமூக மரபுகளின்படி யோசித்துப் பார்த்தால் பெண் தெய்வங்களை ஆண் பூசாரிகள் எப்படி நீராட்ட முடியும்? எப்படி அலங்கரிக்க முடியும்? அதைப் பெண் பூசாரிகள்தான் செய்ய வேண்டும்.

ஆனால் பெண் பூசாரிகளைச் செய்ய விட மாட்டார்கள். மாத விலக்கைக் காரணம் காட்டி மறுப்பார்கள். நவீன காலத்திலும் இப்படி மாத விலக்கைக் காட்டி பெண்களைச் சிறுமைபடுத்தும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கு இருக்கும் மாத விலக்குப் பெண் தெய்வங்களுக்கு இல்லாமல் போய் விடும் அளவுக்கு வெகு சாதுர்யமாக கடவுளை ஆண்கள் நிர்ணயித்து இருக்கிறார்கள்.

பெண்களைக் கடவுளாக ஆண்கள் ஏற்றுக் கொண்டாலும் பெண்களுக்கான கடவுளைப் பெண்களே உருவாக்கிக் கொள்வதுதான் நல்லது. மாரியம்மன், பொன்னியம்மன், அங்காளம்மன், செல்லியம்மன் எல்லாம் பெண்கள்தான். அவற்றின் நடைமுறை ஆண்களால் கட்டுப்படுத்தப்படுவதாக இருப்பதால் பெண்களுக்கான சம வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

இன்னும் பெண்கள் நுழைவதற்கு அனுமதி தேவைப்படும் கோயில்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஆண்களும் பெண்களுமாக சமமாக இணைந்து நுழைய முடியாத மத வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. மத அமைப்புகளில் பெண்களுக்கான உயர் பொறுப்புகள் மறுக்கப்படும் சூழ்நிலை இருக்கிறது. இவற்றையெல்லாம் ஆணின் உக்கிரமான அதிகார வடிவங்கள் என்று சொல்வதன்றி வேறெப்படி சொல்வது?

இந்த உலகம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கான அதிகாரத்தை ஆண்கள் எடுத்துக் கொண்டாலும் அவர்கள் பெண்கள் வழியாகத்தான் பிறந்தாக வேண்டும்.

இது சார்ந்து நீங்கள் நிறைய புரிந்து கொள்ள வேண்டுமானால் பெண்ணியம் குறித்து வாசிக்க வேண்டும். பெண்ணியம் குறித்து வாசிக்க கீழே சொடுக்கவும்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

No comments:

Post a Comment

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா? தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் கூட்டண...