9 Jul 2021

நழுவி விழும் துக்கம்

துக்கம்

துக்கம் தீர

கோயிலுக்குள் போனவரின்

கண்களுக்குள் யானை

தீர்க்க முடியாத

துக்கத்தைச் சுமந்தபடி

கோயிலுக்குள்

யானையின் கண்களுக்குள்

காடு

*****

நழுவி விழுதல்

சொல்லும் போது சொல்வதற்கேற்றவாறு

நழுவி விழுந்தால்

சொல்வது சரியானது

நழுவி விழாமல் போனால்

சொன்னது எவ்வளவு தவறானது

சரியோ தவறோ

மெய்யோ பொய்யோ

மெளனத்தைப் பார்

இரண்டின் சாத்தியங்களையும் கொண்டிருக்கிறது

முடிவில் ஒரு புன்னகை

நினைத்தது போல நடந்தது என்பதைக் காட்டுகிறது

சொல்வதோ மெளனித்திருப்பதோ

அவரவர் விருப்பம்

எதிர்கொள்ளல் தவிர்க்க முடியாத திருப்பம்

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...