8 Jul 2021

எப்போது மெளனம்

எப்போது மெளனம்

எப்போது மெளனமாக இருக்க வேண்டும்

என்று கேட்கிறாய் அல்லவா

தூண்டிலைச் சந்திக்கும் மீன்

வாயைத் திறக்காமல் இருப்பது நல்லது

*****

எதிர்கொள்ளல்

பெரும் பரிசோ

பெருந்துன்பமோ துக்கமோ

பேரழிவோ

எதிர்கொள்வதைத் தவிர

வெறென்ன இருக்கிறது

வழிமுறைகள் அபத்தம் நிறைந்தவை

கருத்துகள் ஆபத்தானவை

அறிவுரைகள் அர்த்தமிழந்தவை

ஒரு பெருந்துயருக்கு முன்னால்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...