கொலைக் காண்டில் இருப்பவர்
எதிராளி
எவ்வளவு கடுமையாக
எடுத்துக்
கொள்வார் என்பது தெரியாமல்
எதைச்
செய்வது
அவர்
எதையாவது செய்யச் சொல்கிறார்
செய்வதை
வைத்து செய்யப்படுவதன்
இருப்பைத்
தீர்மானிப்பவர் அவர்
எதுவும்
செய்யாமல் இருக்கும் வெறுமை
அவரை
எரிச்சலடையச் செய்கிறது
அவர்தம்
இருப்பைக் கேலி குறியாக்கி
அவரை
அவமதிப்பதாய் முகம் சுளிக்கிறார்
எதிராய்
ஒன்றைச் செய்யும் போது
தமக்கான
ஆயுதத்தைத் தூக்க வாய்ப்பு கொடுத்து விட்டதாக
எவ்வளவு
மனம் மகிழ்கிறார்
எதையும்
செய்யாமல் இருந்து கொன்று விடாதே என
மன்றாடியவர்
கொலைக்
காண்டில் கும்மாளமாக
கொல்வது
குறித்து சந்தோஷமாக
உரையாடிக்
கொண்டிருக்கிறார்
*****
No comments:
Post a Comment