6 Jul 2021

குணபாடம்

 சிரிப்பொலி கேட்டுக் கொண்டேயிருக்கிறது

அதுவாக வர வேண்டும்

அதற்குள் அவசரப்படுவதற்கு இல்லை

இந்த அவசரம்

பொறுமையாக நீண்டால் நன்றாயிருக்கும்

மனதைப் பிரித்துப் போடுவது அற்புதமானது

பீராய்ந்து பார்ப்பது இன்னும் அற்புதமானது

அபத்த நாடகங்களின் சிரிப்போலி

கேட்டுக் கொண்டேயிருக்கிறது

*****

பால்யம்

ஏப்பம் வந்து விட்டது

நேற்று சாப்பிட்ட

ஸ்ட்ராபெர்ரி மிட்டாயின் வாசனை

*****

அழித்தொழிப்பு

கடவுள் இருக்கிறாரா இல்லையா

இல்லாவிட்டாலும்

தான் உருவாக்கிய கடவுளை

தாமே அழித்து விட மாட்டார் மனிதர்

*****

குணபாடம்

சாத்தானிடம் உள்ள கெட்ட குணம்

இறைவன் மன்னித்தாலும்

சாத்தான் தண்டிப்பார்

இறைவனிடம் உள்ள நல்ல குணம்

சாத்தான் தண்டித்தாலும்

இறைவன் மன்னிப்பார்

தண்டிப்பவர்கள் சாத்தான்கள்

மன்னிப்பவர்கள் இறைவன்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...