சோறும் குழம்புமே ஏன் போதும்ன்னா…
தடபுடலா சாப்புடுறது ஒரு வகை. எளிமையா சாப்புடுறது இன்னொரு வகை.
தடபுடலா சாப்புடுறப்போ அந்த அளவுக்கு உடம்பு சார்ந்த உழைப்பு இருக்கணும். அப்படி இல்லாதப்போ
சாப்பாட்ட எளிமையா அமைச்சுக்குறது நல்லது.
சோறும் குழம்புமே எளிமையான
சாப்பாட்டுக்குப் போதுமானது. தொட்டுக்குறதுக்கு வெஞ்சனம் இல்லாம என்னத்தெ சாப்புடுறதுன்னு
கேட்டா குழம்புல இருக்குற காய்கறிகளே போதுமானது. தொட்டுக்குறதுக்குன்னு வெஞ்சனமா தனியா
ஒண்ணுத்தெ செய்யணுங்ற அவசியம் இல்ல.
எத்தனை விதமான கறிகாய்ங்க
செய்யணும்ன்னு நெனைக்குறீங்களோ அத்தனையையும் குழம்புலயே போட்டு சாப்புடுலாம். பேர்லயே
குழம்புன்னு இருக்குறதால எத்தனெ கறிகாய்கள வேணாலும் போட்டு குழப்புலச் சாப்புடலாம்.
இப்படிப் பண்ணுறதால நாலு
விதமான நன்மைக இருக்கு. ஒண்ணு என்னான்னா சமைக்குறதுக்கான பாத்திரம் பண்டம் கொறைஞ்சிடும்.
பாத்திரம் புழங்கி அலம்புறதுல அது ஒரு நேர மிச்சப்பாடு. ரெண்டு என்னான்னா சமைக்குறதுக்கான
நேரம் கொறைஞ்சிடும். சோறும் கொழம்புன்னும் ரெண்டே சமையல்தானே. மூணு என்னான்னா சமைக்குறதுக்கான
எரிபொருள் செலவு கொறைஞ்சிடும். நாலு என்னான்னா உடம்பு ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும்.
இதுல ஒரு ரகசியமே இருக்க. இதெ படிச்சிட்டே போனீங்கன்னா கடைசியில அது உங்களுக்குப் புரிஞ்சிடும்.
உடம்போட ஆரோக்கியத்துக்கும்
சோறு குழம்புக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு நீங்க கேக்கலாம். இதெ கிராமத்து சனங்ககிட்டெ
அனுபவத்துல பாத்து நான் தெரிஞ்சிக்கிட்டேன். அப்படிச் சாப்புட்ட யாருக்கும் சர்க்கரை
நோயோ, கொழுப்பு நோயோ வேறெந்த நோயோ இல்ல. டாம்பீகமா மூணு கறி, நாலு கறின்னு தடபுடலா
சாப்புட்டவங்க எல்லாருக்கும் இங்க பல வெதமான நோய்க இருக்கு. தடபுடலா சாப்புட்டதால வந்த
நோயிங்க அதுன்னு நல்லாவே தெரியுது.
சோறும் குழம்புன்னு ஆயிட்டா
மீனை வாங்குன்னாலும் மீன் கொழம்போட விசயம் முடியுது. மீன் வறுவல், பொறியல்ன்னு நீட்டிச்சுக்க
முடியாது. அப்படி நீட்டிச்சீங்கன்னா நீங்க சோறோடயும் குழம்போடயும் நிறுத்திக்கலன்னுத்தாம்
அர்த்தம். இதெ நெலைதான் ஆட்டுக்கறிக்கும் கோழிக்கறிக்கும். ஆட்டுக்கறிக் குழம்போடயோ,
கோழிக்கறி குழம்போடயோ நிறுத்திக்க வேண்டியதுதாம். அதெ போட்டு வறுத்து பொறிச்சு எடுக்குற
வேலை கெடையாது. கறிகாய்ங்களுக்கும் இதெ நெலைதாம்ங்றதால இந்த எண்ணெய்ல வறுத்தல், பெறித்தல்ங்ற
வேலை இல்லை பாருங்க அது உடம்புக்கு அவ்வளவு ஆரோக்கியம்.
அத்தோட வறுவல், பொறியியல்
சமாச்சாரங்கள் இல்லன்னா நீங்க அதிகமா சாப்புடவும் மாட்டீங்க. எவ்வளவு பசியோ அவ்வளவோட
நிப்பாட்டிப்பீங்க. ஆனா வறுவல், பொறியல் சமாச்சாரங்கள் ஆகாரத்தெ பசியளவோட நிப்பாட்டாது.
நாக்கு ருசிக்கிற வரைக்கும் அதாச்சி தொண்டை வரைக்கும் உங்கள சாப்புட வைக்கும். இளமை
காலத்துல அது ஒரு பெரிய பிரச்சனை கெடையாது. போகப் போக அப்படி சாப்புடுற சாப்பாடுதாம்
உடம்புல, மூட்டுல, உசுருல பிரச்சனைய உண்டு பண்ணுது.
நம்ம வீட்டோட சமையல் கூடத்தெ
சமைச்சு சாப்புடுற எடமா நாம்ம பாக்குறோம். அது ஒரு வேதியியல் தொழிற்சாலைங்றதெ கவனிக்க
மறந்துடுறோம். சமைக்கிறதெ சமன்படுத்துறதுன்னு சொல்லுவாங்க. அதால சாப்பாடு மென்மையா
ஆவுது, ருசியா ஆவுதுங்றது உண்மைன்னாலும் சமைக்குற அத்தனை சமாச்சாரங்களும் வேதியியல்
வினைகள்தாம்ங்றதெ நாம்ம மறந்துடக் கூடாது. இந்த வேதி வினைகளுக்கு உட்படாத சாப்பாடு
இருந்தா உங்களுக்கு நோப்பாடே கெடையாதுங்றது நோய் அணுகா விதியாகுது.
நீங்க மட்டும் கறிகாய்கள
பச்சையாவும், பழங்கள அப்படியேயும், தேங்காயையும் மட்டும் சாப்புட்டு வாங்க. உங்களுக்கு
எந்த நோப்பாடு இருந்தாலும் வைத்தியசாலைக்குப் போவாமலேயே குணம் பண்ணிக்கலாம். எந்த நோப்பாடுன்னா
அது எந்த நோப்பாடா இருந்தாலும் சரித்தாம். இன்னும் மருந்து கண்டுபிடிக்காத கொரோனா,
எய்ட்ஸ் வரைக்கும் இந்தக் குணப்பாட்டுல வரும். இதெ கடைபிடிக்குறதுதாம் கஷ்டம். நம்ம
நாக்கு அப்படிப்பட்டதா இருக்கு.
நெலைமை இப்படி இருக்குறப்போ
சமையல்ங்ற வேதித் தொழிற்சாலையிலேந்து சாப்புடுறதெ கொறைச்சிக்கிட்டா அது ஒரு வகையில
ஆரோக்கியம்தானே. அதாலத்தாம் சோத்தோடயும் குழம்போடயும் நிப்பாட்டிக்குங்கன்னு சொல்றது.
இப்படிச் சாப்புடுறதால உங்களால நெறையவும் சாப்புட முடியாது, அளவுக்குக் கொறைச்சு சாப்புடவும்
முடியாது. ஏன்னா இதுதாங் ஒங்க நெலைமைன்னா உங்களுக்கு நல்லாவும் பசிக்கும், ஓரளவுக்கு
மேல சாப்புடவும் மனசு விரும்பாது. இது ஒரு வகையில நன்மை.
இன்னொரு வகையில இன்னிக்கு
நாம்ம வாங்குறு கறிகாய்ங்க அத்தனையும் விஷன்னு சொன்னா நம்புவீங்களா? நம்ம சாப்புடுற
அரிசி கூட விஷம்ன்னு சொன்னா நம்புவீங்களா?
விஷத்தெ தின்னா மனுஷன் செத்துட
மாட்டானான்னு நீங்க கேக்குறீங்க இல்லத்தானே? அப்படி நீங்க செத்துட்டா உங்ககிட்டெ எந்தப்
பொருளெ வித்து சம்பாதிக்கிறதாம்? அதால உங்கள சாவ வுடாத அளவுக்கு அதே நேரத்துல நீங்க
ஆரோக்கியமா இல்லாத அளவுக்கு விஷத்தெ கலந்துப்புட்டா ஒரே கல்லுல ரெட்டை மாங்காய்ய அடிச்சிப்புடலாம்ல.
அதென்ன ரெட்டை மாங்கன்னா ஒரு மாங்கா உங்கள சாவடிக்காம உசுரு வாழ வெச்சு வாங்க வைக்கிறது,
இன்னொரு மாங்கா அதெ வாங்கித் தின்னுப்புட்டு நீங்க சாவாம இருக்க ஆஸ்பத்திரிக்கு அலைய
விட்டு உங்கள வியாதிக்காரனா மாத்தி மருத்துவம் பண்ணி அதுல சம்பாதிக்கிறது. அதாங் இங்க
நடக்குது. அதால நீங்க சாவ மாட்டீங்க. ஆன்னா சாவாம செத்துட்டு இருப்பீங்க.
இங்கநெல்லை விளைவிக்குறது
ரசாயனந்தாம்ங்றதும், அதெ பூச்சிக தாக்காம காப்பாத்துறது விஷந்தாங்றதும் உங்களுக்குத்
தெரிஞ்சா நீங்க அரிசி வாங்கிச் சாப்புடுவீங்களா? ஆனா சாப்புடுவீங்க. ஏன்னா வேற வழியில்ல.
உசுரு வாழ்றதுக்கு எதையாவது தின்னுத் தொலைய வேண்டியதா இருக்கே. அதெ தின்னு தொலைஞ்சா
அதால உண்டாவுற வியாதிக்கு மருந்து தேட வேண்டியதா இருக்கே. இப்படி ஒரு சுழற்சியிலத்தாம்
நாம்ம சிக்கியிருக்கோம்.
இங்க நெல்லு எப்படி விளையதுன்னா,
களை பறிக்க செலவு ஆவும்ன்னு நெல்லு வெளைய ஆரம்பிச்சதும் களைக்கொல்லிய அடிப்பாங்க. அது
நல்லா கௌம்பணும்ன்னு யூரியாவையும் டிஏபியையும் உரமா கொடுப்பாங்க. இடையில பூச்சிக தாக்கிடக்
கூடாதுன்னு உலக நாடுக பலவற்றாலும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள அடிப்பாங்க. நெல்லு
மணி மணியா வரணும்ன்னு பொட்டாஷ் உரத்தெ கொடுப்பாங்க. மொத்தத்துல நீங்க சாப்புடுற அரிசி
நெல்லா இருந்தப்போ உறிஞ்சி வளந்தது எல்லாம் பூமியில இருக்குற சத்தையோ இயற்கை தர்ற சக்தியையோ
இல்ல.
நெல்லு உறிஞ்சனதும் சுவாசிச்சதும்
ரசாயனத்தையும் பூச்சிக்கொல்லி விஷத்தையுந்தாம். இந்த நெல்ல பூச்சி அடிக்காம காப்பாத்தவும்,
எலி திங்காம பண்ணவும் அதுக்குன்னு நெறைய வேதிப்பொருளுங்க இருக்கு. நெல்லு மூட்டை மேல
ஸ்பிரேயர்ர வெச்சு பூச்சிக்கொல்லிய அடிப்பாங்கங்ற வரைக்கும் இதுல நெறைய விசயம் நடந்துகிட்டே
இருக்கும். பெற்பாடு இது உங்களுக்கு மொனை முறியாத அரிசியா வரணும்ன்னா அதுக்கும் ரசாயனம்
இருக்கு. அரிசியா வெள்ளையா வெளுக்குறதுக்கும் ரசாயனம் இருக்கு. மொத்தத்துல ரசாயனத்துல
பொறந்து ரசாயனத்துல வளந்து ரசாயனத்தெ குடிச்சி வந்த அரிசியத்தாம் நாம்ம சாப்புட்டுட்டு
இருக்கோம்.
நீங்க நெனைக்குறாப்புல அரிசிச்
சாப்பாட்டால யாருக்கும் சர்க்கரை நோயி வர்றதில்ல. அதோட வளர்ப்புக்குள்ள அதுல கலக்குற
ரசாயனத்தாலயும் பூச்சிக்கொல்லியாலயும்ந்தாம் அத்தனையும் வருது. நீங்க மட்டும் இயற்கையா
ரசாயனம் இல்லாம நெல்லை விளைவிக்குறவங்ககிட்டெ அரிசிய வாங்கிச் சாப்புட்டுப் பாருங்க.
உங்களோட உடம்பு சர்க்கரை உடனே கொறைஞ்சிடும்ன்னு சொல்ல வரல. அதுக்கு மேல அதிகமாவாது.
நீங்க சர்க்கரைய கொறைச்சிட்டு தொடர்ந்து இயற்கையான மொறையில வளர்ந்த அரிசி சாப்புட்டா
அதுக்குப் பெற்பாடு சர்க்கரைங்ற பெரச்சனையும் வாராது.
அரிசிக்கே இப்படின்னா கறிகாய்களப்
பத்திச் சொல்லவே வேணாம். கறிகாய்களுக்கான செடிக தினம் தினம் ரசாயனத்துல குளிச்சாத்தாம்
பூச்சி இல்லாம அதுக வளர முடியும். இதுல மரபணு மாத்தம் பண்ணப்பட்ட கறிகாய்ங்க வேற இருக்கு.
இதெ போயி நீங்க வறுத்துப் பொறிச்சின்னு வேதியியல் வேலைகள்லாம் பண்ணீங்கன்னா அதோட ரசாயன
மாத்தம் வேற லெவல்ல போவும். இதெ குழம்புல மட்டும் போட்டுச் சாப்புடுறது ஓரளவுக்குப்
பாதுகாப்புத்தாம். ஏன்னா நம்மோட குழம்போட அமைப்பு அப்படி. உப்பு, புளி, மஞ்சள், சீரகம்,
பெருஞ்சீரகம், மிளகுன்னு விஷத்தை, ரசாயனத்தைத் தணிக்கிற விசயங்க அதுல அதிகம். அதோட
சேர்றப்போ கறிகாய்களோட விஷம் மட்டுபடுறதுக்கான வாய்ப்புங்க இருக்கு. பத்து மிளகு இருந்தா
விஷத்தெ வைக்குற பகையாளி வீட்டுலயும் தெகிரியமா சாப்புடலாம்ன்னு கிராமத்துல சொல்லுவாங்க.
இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே
சோத்தோடயும் குழம்போடயும் சாப்பாட்ட நிறுத்திக்கிறதோட இன்னொரு ரகசியத்துக்கான காரணம்.
ஆன்னா விசயம் இத்தோட முடியல. இனுமேத்தாம் ஆரம்பமாவுது. அதெ நாளைக்குப் பேசுவோம்.
*****
No comments:
Post a Comment