15 Jul 2021

வெடித்துச் சிதற உத்தரவிடு எசமானே!

வெடித்துச் சிதற உத்தரவிடு எசமானே!

உத்தரவு கேட்க காத்திருக்கின்றன

உத்தரவை நோக்கித் தூண்டுகின்றன

உத்தரவிடச் சொல்லி பைத்தியமாக்குகின்றன

உத்தரவு கிடைத்தால் போதுமென்று

மாய்ந்து மாய்ந்து தேடுகின்றன

செய்திகளைக் கொண்டு வந்து குவிக்கின்றன

தகவல்களைக் கொண்டு வந்து கொட்டுகின்றன

அனிச்சையாய் ஸவிட்ச் ஆப்பாகிக் கிடக்கும்

செல்பேசியை விடாமல் தடவிப் பார்க்கையில்

பிணத்தைப் புணர்வதைப் போலிருக்கிறது

உத்தரவுகள் விரல்வழி கைபேசிக்குப் போகிறதோ

கைபேசியினின்று விரலின் ஊடே மூளைக்குப் போகிறதோ

உத்தரவுகள் வேண்டும் உத்தரவுகள் வேண்டும் என்று

ஹார்மோன் வெடித்து ரத்தக் குழாய்கள் சிதறி

சுவரில் பட்டுத் தெறிக்கிறது கைபேசி

தொடுதிரை சின்னாபின்னமான கைபேசியை

ரத்தம் வழிய வழிய தடவிக் கொண்டிருக்கின்றன விரல்கள்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...