14 Jul 2021

பறக்கும் எலும்புகளின் முன்னறிவிப்பு

றக்கும் எலும்புகளின் முன்னறிவிப்பு

கிளம்பிச் செல்கையில்

அந்த நிலையத்தின் வழியே

நீளும் சாலையிலிருந்து அண்ணாந்து பார்க்கையில்

வானில் டயனோசரின் எலும்புக் கூடு பறக்கிறது

மிகப் பெரிய மனித மண்டை ஓடு ஒன்று அதே போல

கீழிருந்து மேலே கிளம்பிப் பறக்கிறது

ராட்சச மார்பெலும்பு, முதுகெலும்பு, தொடையெலும்பு என்று

தனித்தனியாகக் கிளம்பிப் பறக்கின்றன

இதுவரை இந்தப் பூமியில் வாழ்ந்த

அத்தனை உயிர்களின் எலும்புக் கூடுகளும்

ஒவ்வொன்றாய் எழுந்து பறக்கின்றன

மிரட்சியோடு வேடிக்கைப் பார்த்து நிற்கும் கூட்டத்தை

அந்தத் துறை ஒழுங்குப்படுத்துகிறது

சிறிது நேரத்தில் இந்தப் பூமியை விட்டு வெளியேறுங்கள் என்ற

அறிவிப்பு நான்கு திசைகளிலிருந்தும் வெளியாகிறது

இந்தப் பூமியை விட்டு வெளியேறுங்கள் என்றால்

எங்கு வெளியேறுவது?

தன் வாழ்நாளில் முதன் முறையாக மனைப்பதிவுக்குக்

கிளம்பி நிற்கும் ஒருவர் முன்னேறிச் செல்ல முடியாமல்

வெளியேறி ஓட முடியாமல் தயங்கித் தயங்கி நின்று பார்க்கிறார்

இந்தப் பூமியை விட்டு வெளியேறுகள் என்ற அறிவிப்பு

கர்ண கொடூரமாக கேட்கத் துவங்குகிறது

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...