13 Jul 2021

கால்களின் கண்களுக்குத் தட்டுப்படும் பாதை

காத்திருப்புகள்

எனக்காகக் காத்திருந்தால்

தயவுசெய்து சென்று விடுங்கள்

நீண்ட நேரம் தேவையாய் இருக்கிறது எனக்கு

உங்களுக்கும்தான் நீண்ட நேரம் தேவையாய் இருக்கிறது

யாரையும் காக்க வைக்காதீர்கள்

அனுப்பி விடுங்கள்

*****

கால்களின் கண்களுக்குத் தட்டுப்படும் பாதை

கால்களின் பாதங்களில் இருக்கின்ற

விரல்களுக்குக் கண்கள் உண்டு

அவைப் பார்த்து நடக்கின்றன

நகக்கண்களின் பார்வையில்

ஒற்றையடிப் பாதை ஒன்று

நடந்து நடந்து உருவாகின்றது

அந்தப் பாதை முகத்தில் இருக்கின்ற

கண்களுக்குக் கவனத்தில் இல்லை

நடப்பதும் பார்ப்பதும்

கால்களின் வேலை என்று

முகக் கண்கள் அலட்சியமாய் இருக்கின்றன

ஒற்றையடிப் பாதை கால்களில்

எங்கோ பதிவாகி விட்டது

முகக்கண்களை மூடி விட்டால்

கால்களின் கண்களுக்குப் பாதை தெரிகின்றது

அவை நடந்து கொண்டிருக்கின்றன

முகக் கண்களுக்குத் தெரியும் வானத்தின் பாதையில்

நடக்க முடியாத ஆற்றாமையில்

ஒற்றையடிப் பாதையில் நடக்கும்

கால்களின் கண்களுக்குத் தெரிவதெல்லாம்

நடந்து நடந்துத் தேய்ந்த பாதையின்

தேய்ந்த ரேகைகள் தெரியும்

நீண்டு கொண்டே போகும்

நீண்டு கிடக்கும் பாதைதாம்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...