12 Jul 2021

விரும்ப வைக்கப்படுதல்

விரும்ப வைக்கப்படுதல்

நீங்கள் இறப்பிற்குப் பின்

ஒரு மகன் செய்யும் கடமையைப் பார்க்க வேண்டும்

ஏன் ஒரு மகனைப் பெற வேண்டும்

என்பதற்கானப் பைத்தியம் அதற்குப் பின்

உங்களுக்குப் பிடிக்கும்

நீங்கள் திவசம் செய்யும் இன்னொரு நாளில்

உயிர்த்து வந்துப் பார்க்க வேண்டும்

மகள் இருக்கின்ற மகன் இல்லாத

தகப்பனாய் ஆனதற்கு நீங்கள் நொந்து போவீர்கள்

நீங்கள் ஆண் பிள்ளையை விரும்பவில்லை

விரும்ப வைக்கப் படுகிறீர்கள்

*****

கூரை வானம்

வெயிலை மறைப்பதற்காகப் போட்ட கூரை

சூரியனை மறைத்து விட்டது

மழையைத் தடுப்பதற்காகப் போட்ட கூரை

மழைநீரை மண்ணில் படாமலே செய்து விட்டது

கூரைகள் விரிந்து கொண்டே போகின்றன

வெயில் எங்கே

மழை எங்கே

ஏ.சி. கூரை வேய்ந்த அறைகளில்

மழைநீர்ச் சேமிப்பிற்கான முணகல்கள்

கேட்டுக் கொண்டிருக்கின்றன

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...