5 Jun 2021

ஒளிஞ்சாம் பிடிச்சி விளையாடுதாம் பணம்

ஒளிஞ்சாம் பிடிச்சி விளையாடுதாம் பணம்

ஒண்ணு போதும்

நின்னு பேசும்

பணம்

*****

ஓட்டுகள் நோட்டகளாக

மாறியதைக் கேள்விபட்ட பின்னுமா

நம்பிக்கையில்லை

ஓட்டு வங்கி என்பது சரிதான் போ

*****

சீட்டுகள்

நோட்டுகளாக அச்சானால்

அது ரிசர்வ் பேங்க் என்றும்

ஓட்டுகள்

நோட்டுகளாக உருமாறினால்

அது தேர்தல் களம் என்றும்

பேசிக் கொல்கிறார்கள்

ஆம் கொல்கிறார்கள்

*****

மக்கள் பணம் என்று

சொல்ல மனதில்லாவர்கள்

கட்சிப் பணம்

பார்த்துப் பண்ணுங்க என்கிறார்கள்

கட்சி எங்கடா உழைத்துப்

சம்பாதித்தது

*****

மக்களுக்கு எது தேவையோ

அதைக் கொடுக்கிறார்களாம்

நன்றாகக் கொடுங்கள்

தேர்தலுக்குப் பின் மறந்து விடாதீர்கள்

*****

தவறாக நினைத்துக் கொள்ளவில்லையெனில்

ஓரிரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்

இவ்வளவு பணமும்

முன்பு எங்கே போயிருந்தது

வங்கிகளிலும் ஏ.டி.எம்.மிலும்

பணம் இல்லையென்று

திருப்பி அனுப்பப்பட்ட போது

எந்த பிரபஞ்சத்திலிருந்தது

இப்போது தலைகாட்டுவதற்காக

அப்போது தலைமறைவாக

ஒளிஞ்சாம் பிடித்து விளையாடப் போயிருந்திருக்கலாம்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...