3 Jun 2021

கனத்துப் போகும் மனம்

கனத்துப் போகும் மனம்

ஆறுதல் வார்த்தைகள் பயனிழந்துப் போகின்றன

அடக்க முடியாத அழுகைப் பீறிட்டு எழுகிறது

ஒரு சிறு ஆசை நிராசையாய் முடிவதன்

ஆற்றாமையைத் தாங்க முடியாத வேதனை

எல்லாவற்றையும் நிராகரிக்கச் சொல்கிறது

காயம் பட்டுப் போய் நிற்கும்

ஆறுதல் சொல்பவரை யார் ஆறுதல் செய்வது

பிடிவாதத்தைக் கரைத்துக் கொள்ள விரும்பாத மனம்

மென்மேலும் காயப்படுத்திக் கொண்டே போகிறது

நிறைவாக ஆறுதல் செய்ய முயன்றவருக்கு

ஆறுதல் தேவையாக இருக்கிறது

தேவையானவருக்குக் கிடைக்காமல்

கிடைப்பவருக்குப் பயனில்லாமல் போகுமிந்த ஆறுதலைக்

கொன்று போட்ட பின்

எத்தகைய குற்றத்தை நிகழ்த்தி விட்டோம் என்று

கனத்துக் கொண்டே போகிறது மனம்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...