2 Jun 2021

மன்னிப்பு விண்ணப்பம்

மன்னிப்பு விண்ணப்பம்

முடியுமானால் விசாரணையை நிறுத்திக் கொள்ளுங்கள்

குற்றவாளிக்கான கருணைக் காலத்தை

நீட்டித்துக் கொண்டே போகுமிந்த விசாரணை

பாதிக்கப்பட்டவரைக் காத்திருக்கச் செய்து

கருணைக் கொலை செய்கிறது

சாமர்த்தியமாகத் தப்பிக்கத் தெரிந்தவர்களால்

பாதிக்கப்பட்டது பெரும் பிழையாகிப் போய் விட்டது

அனுபவத்தின் கோரப் பிடியில் நசுங்கிப் போனவர்கள்

நடந்தது நடந்து விட்டது என்கிறார்கள்

தலைக்கு மேல் தெய்வமாய்ப் போனவர்கள்

மன்னிப்பே ரட்சிப்பு என்கிறார்கள்

நீதியின் தேவதையே எங்களை மன்னியும்

எங்கள் முறையீட்டுக்காக

எங்கள் நம்பிக்கைக்காக

நீதியை நிலைநாட்டிச் செல்ல முடியாத

எங்கள் இயலாமைக்காக

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...