21 May 2021

ஞானப்பழம்

ஞானப்பழம்

ஆப்பிள் போனில் பார்க்கிறேன்

ஆப்பிள் ஓர் அதிசயம்

ஆதாமைக் கடிக்க வைக்கிறது

ஆதாமுக்கு அதுவே ஞானப்பழம்

தினம் ஒன்று தின்றால்

மருத்துவரை விரட்டும் ஆற்றல் பெற்ற ஆப்பிள்

கிலோ இருநூறுக்கு விலை போகிறது

முன்னொரு காலத்தில்

நியூட்டனின் தலையில் விழுந்திருக்கிறது

புசிக்காமல் போன

அவரின் அறியாமைக்காக

அது அழுதிருக்கக் கூடும்

யாருக்குத் தெரியும் ஆதியில் நிகழ்ந்தவைகள்

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...