20 May 2021

எல்லாம் வெறும் பெயர்கள்

எல்லாம் வெறும் பெயர்கள்

எல்லாம் பெயர்களே

நிகழ்வதற்கு உலகம்

பெயர் சூட்டிக் கொள்கிறது

கணிப்பிற்கு உலகம்

பெயர் சூட்டிக் கொள்கிறது

மாறி நிகழும் போது

ஏமாற்றம் என கூறிக் கொள்கிறது

ஏமாந்து போகும் போது

அதிர்ஷ்டமில்லை என கூறிக் கொள்கிறது

எதிர்பார்த்ததைப் போல வெற்றி எனும் போது

ராஜதந்திரம் என கூறிக் கொள்கிறது

முடிவை அழிவு என்கிறது

மரணம் என்று கதறுகிறது

எல்லாம் வெறும் பெயர்களே

*****

 

நிஜமான கலைஞர் நிஜமான ரசிகர்

ழகான பூ

ரசித்த பின்

வாடி விடுகிறது

ரசனை மட்டும் அப்படியே இருக்கிறது

கல்லில் செதுக்கி வைத்த பூவைப் போல

பூவைக் கல்லாய் உறைய வைத்தவரோ

கல்லைப் பூவாய் நிறைய வைத்தவரோ

எவர் கலைஞர்

எவர் ரசிகர்

மீண்டும் அழகான பூ

ரசித்த பின்

வாடி விடுவதற்குள்

கண்டுபிடியுங்கள்

எவர் கலைஞர்

எவர் ரசிகர்

சுவர் இடிந்து விழும் ஓசை கேட்டால்

நீங்களே நிஜமான கலைஞர்

நீங்களே நிஜமான ரசிகர்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...