19 May 2021

நிறங்களின் அரசியல்

நிறங்களின் அரசியல்

வாழ்க்கையின் ஓவியத்தைப் பாருங்களேன்

ஒரு பக்கம் கருப்பாக இருக்கிறது

ஒரு பக்கம் வெள்ளையாக இருக்கிறது

கரும்பலகையில் எழுதப்படும் வெள்ளை எழுத்தும்

வெள்ளைத் தாளில் எழுதப்படும் கருப்பு எழுத்தும்

ஒரு பொருளைத் தருகின்றன என்பதை நாம் நம்பலாம்

உலகம் நம்பாது

அதற்குப் பிரச்சனைகள் தேவை

வெள்ளையை உயர்வென்று சொல்லும்

கருப்பைத் தாழ்வென்று சொல்லும்

இரண்டும் சேர்ந்ததொரு ஓவியத்தில்

வெற்று வெள்ளைத்தாளை சித்திரமாக்கியது கருப்பு

கருப்போ வெள்ளையோ இரண்டும் நிறங்கள்

இரண்டும் வெறும் நிறங்கள்

உலகுக்கு அப்படியா என்று நீங்கள் சொல்லுங்கள்

*****

No comments:

Post a Comment

நடப்புக் கணக்கு

நடப்புக் கணக்கு உங்கள் கணிப்புகள் தவறாகின்றன என்று தெரிந்தும் எப்போதாவது நிறுத்தி இருக்கிறீர்களா யாரிடமிருந்து ஆர்வமும் வெறியும் எ...