18 May 2021

பாசாங்குக்காரனின் சொற்கள்

மலைபெயர் காற்று

கையேந்தி நின்ற போது

கைகளிரண்டையும் பிடுங்கிப் போனது

புயல் காற்று

அறிவிப்புத் தர அவகாசம் இல்லை

முன்னறிவிப்பு தந்தாலும் என்ன செய்ய

மலையைப் பெயர்த்து வீசும் காற்றை

காற்று அசைக்க முடியாத சக்தி

மூச்சை இழுத்து மெதுவாக விடு

வெளியே புயல் காற்று வீசிக் கொண்டிருக்கிறது

ஓய்ந்த பின்

உன் பெருமூச்சை விடலாம்

*****

பாசாங்குக்காரனின் சொற்கள்

எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத

உன் சொற்களை

நீயே வைத்துக் கொள்

உன் சொற்கள் பாசாங்கானவை

அன்பு கருணை பரிவு

இன்னும் என்னென்னவோ சொல்லி ஏய்க்கிறாய்

உயிர் வாழ போராடிக் கொண்டிருக்கும் போது

சொகுசு வாழ்க்கை ஏன் வாழவில்லை

என்று கேட்டு எரிச்சல் அடைகிறாய்

கையில் இருக்கும் சோற்றுப் பருக்கைகளை

ஒட்ட வழித்து உறிஞ்சி எடுத்து விட்டு

விருந்து போடுகிறேன் என்கிறாய்

ஒட்டிய வயிற்றின் பள்ளத்தில்

பள்ளதாக்கின் அழகு இருப்பதாய்

ரசிக்கக் கற்றுத் தருகிறாய் நீ

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...