17 May 2021

மேலும் மேலும் அவர் சொன்னார்

மேலும் மேலும் அவர் சொன்னார்

வளர்க்கும் பறவைக்கு

வாடகைக் கூடு இருப்பதாகச் சொன்னவரை

ஆச்சரியமாகப் பார்த்தேன்

கிராமத்துக் கூட்டின் வாடகை கம்மி

நகரத்துக் கூட்டின் வாடகை அதிகம் என்றார்

என் பறவைக்குக் கூடு கட்டத் தெரியும் என்ற போது

கூடு கட்ட லோன் வாங்கிக் கொள்ளலாம் என்றார்

என் பறவைக்குக் கூடே வேண்டாம் என்ற போது

பறவை வளர்ப்பதற்கு வரி கட்ட வேண்டும் என்றார்

எங்கள் இணையதளத்தில்

விண்ணப்பக் கட்டணம் கொடுத்து

பதிவு செய்து கொண்டால்

பத்து விழுக்காடு வரி விலக்கு உண்டு என்று

மேலும் அவர் சொன்னார்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...