16 May 2021

பயமும் உருவாக்கமும்

பயம்

பயமாகத்தான் இருக்கிறது

பயத்தை யார் போக்கப் போகிறார்கள்

பயம் பழகிப் போகப் போகிறது

*****

உருவாக்கம்

நான் பார்த்து விட்டேன்

முன்மாதிரியாகக் கொள்ளத் தக்கவர்

அயோக்கியராக ஆகி விடுகிறார்

அயோக்கியராகக் கொள்ளத் தக்கவர்

முன்மாதிரியாக ஆகி விடுகிறார்

மனிதரின் தேர்வை

முட்டாள்தனமாக ஆக்குவது

இயற்கையின் வேலையாக இருக்கிறது

தேவை எப்படியோ

அப்படி ஒருவர் உருவாகப் போகிறார்

உருவாக்கப் பார்ப்பதோ

உலகில் நிற்கப் போவதில்லை

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...