15 May 2021

திருடர் மன்னிப்பார் என்று நம்புதல்

 திருடர் மன்னிப்பார் என்று நம்புதல்

இரவு உறங்கிக் கொண்டிருக்கிறது

நாய்கள் குரைத்துக் கொண்டிருக்கின்றன

தொலைக்காட்சி வெளிச்சத்தைத் துப்பிக் கொண்டிருக்கிறது

தூக்க மாத்திரையும் தண்ணீர் கிளாஸூம்

பக்கத்துப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கின்றன

திருட வந்தவரோடு பேசிக் கொண்டிருக்கிறேன்

அவரோ எரிச்சலில் கத்திக் கொண்டிருக்கிறார்

எடுத்துக் கொடுக்க பிரசர் மாத்திரைகள் இருக்கின்றன

பிரசர் மாத்திரைகளைத் திருட வந்தவரா அவர்

மருந்து கடைக்காரரிடம் தங்கச் சங்கிலி இருக்கிறது

கல்லாவிலும் ஏதேனும் வைத்திருப்பார்

*****

ச்சூ ச்சூ காதல்

என்னதான் முதிர்ச்சி அடைந்தாலும்

மனது மட்டும்

குழந்தை

 

ஏமாறுவது என முடிவெடுத்த பின்

காதலித்துத் தொலை

 

கொசுக்கடி

நதியின் துர்நாற்றம்

ப்ளாட்பாரம்

பர்சில் பத்திரமாய்

உன் போட்டோ

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...