14 May 2021

மெல்லிசைப் பாடலின் வேதனை

மெல்லிசைப் பாடலின் வேதனை

இரவுக்கு மெல்லிசைப் பாட்டின் துணை வேண்டியிருக்கிறது

தூங்கும் வரை ஒலிக்கப்பட்டு

தூங்கிய பின் அணைக்க

இரவுக்கு யாராவது இருந்தால்

இந்த இரவு இனிய இரவாக இருக்கும்

தனிமை இரவுக்கு அது சாத்தியமா என்ன

இரவு முழுவதும் வழியும் மெல்லிசைப் பாடல்கள்

கசிந்து ஓடிக் கொண்டிருக்கின்றன

கனவுகள் ரத்தம் தெறிக்க ஒளிபரப்பாகின்றன

அதிகாலையில் அதற்கு மேல் துணை வராத

தூக்கத்தைத் துடைத்தெறிந்து விட்டு

மெல்லிசைப் பாடலை நிறுத்தும் போது

அது அழுகிறது

இரவு முழுவதும் ஒலித்த வேதனை

அதற்கு இருக்கிறது

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...