13 May 2021

மறுபிறப்பின் மன்றாடிகள்

மறுபிறப்பின் மன்றாடிகள்

கிறிஸ்துவும் நம்பியிருப்பார்

கிருஷ்ணருக்கு அப்படியொரு கற்பனை இருந்திருக்கும்

நபிகளின் கனவும் அதுதான்

சமாதானப் பேரரசு இன்னும் உருவாகவில்லை

அவர்கள் நூல்கள் வழியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்

அவைகள் சில நேரங்களில்

சமாதானப் புறாக்களாய்ப் பறக்கின்றன

சில நேரங்களில்

வெடிகுண்டுகளாய் வெடிக்கின்றன

குற்றங்கள் தண்டனைகளுக்கான விதிகள்

என்ன இருக்கின்றன

விதிகள் இருந்தும் என்னவாம்

கனிவாக குற்றங்களை

மன்னிப்பாக தண்டனைகளை

அணுகுவதைச் சொல்லிச் சென்றவர்கள் சென்று விட்டார்கள்

கனிவுகள் சிலுவையில் அறையப்படுகின்றன

மன்னிப்புகள் துரத்தி அடிக்கப்படுகின்றன

இன்னொரு கிறிஸ்து கிருஷ்ணா நபி

பிறந்து வரக் கூடும் என்ற நம்பிக்கையில்

குற்றங்களும் தண்டனைகளும் தொடர்கின்றன

ஒரு வேளை அவர்களின் இரண்டாம் பிறப்பு நிகழ்ந்தாலும்

அவர்களின் மூன்றாம் பிறப்பை எதிர்பார்ப்பவர்கள் அன்றோ நாம்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...