ஒரு சொட்டு ஞானம்
மெளனத்தின் ஆழத்திலிருந்து
கிளம்பி வரும் சில சொற்கள்
சட்டென நின்று கொள்ளும்
நன்மையின் அளவு எவ்வளவென்று
அவைகளுக்குத் தெரியும்
அளவை நீட்டிக்க நன்மைக்குத் தெரியாது
அளவு நீட்டித்தல் நன்மை ஆகாது
*****
ஆசை அளவில்லாதது வானம் போல
வானத்தை அளந்திட நினைக்கும்
முட்டாள் இல்லை ஞானி
வானத்தை ரசித்துப் பார்க்கிறார்
கண்டு கொள்ளாமல் போய் விடுகிறார்
வானம் அளவிட முடியாதது
வானம் கையில் வராதது
*****
உயிர் வரும் போது
மண்ணை விட்டு எழும்புகிறது
உயிர் போகும் போது
மண்ணுக்குத் திரும்புகிறது
மண்ணைச் சொந்தம் கொண்டாடும்
ஆனால்
எல்லாம் மண்ணுக்குச் சொந்தம்
உயிர் சில காலம்
*****
No comments:
Post a Comment