9 Apr 2021

மனிதர்களைக் கொன்று விடாதீர்கள்


 மனிதர்களைக் கொன்று விடாதீர்கள்

மனிதர்களைக் கொன்று விடாதீர்கள்

இதயம் நான்கு லட்சம்

நுரையீரல் இரண்டு லட்சம்

சிறுநீரகம் மூன்று லட்சம்

கல்லீரல் ஒன்றரை லட்சம்

கண்கள் ஒரு லட்சம்

தோல் இரண்டரை லட்சம்

லட்சங்களைச் சுரண்டி எடுப்பதற்கு முன்

மனிதர்களைக் கொன்று விடாதீர்கள்

சுரண்டி எடுத்த பின்

எவரையும் உயிரோடு வைக்காதீர்கள்

உறுப்புகளின் சந்தை மாநாடு

இரத்த நிறத்தில் ஒரு திரவம் பருகியபடி

மீண்டும் உரத்து சொல்லியபடி நிறைவு பெறுகிறது

மனிதர்களைக் கொன்று விடாதீர்கள்

மறுநாள் ஊடகங்கள் அலறுகின்றன

விசும்பல்களைப் புறந்தள்ளியபடி

மனிதர்களைக் கொன்று விடாதீர்கள்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...