8 Apr 2021

தடையில்லாச் சான்று


 தடையில்லாச் சான்று

ரகசியமாக நடந்து செல்லும்

பூனையின் கால்களைப் பிடுங்கிக் கொண்டு

லிப்ட் மேல் ஏறுகிறது

திருடன் வருவதாக எச்சரிக்கை செய்கிறது சைரன்

பின் அதை மாற்றிக் கொண்டு

கொலைகாரன் என அலறுகிறது

எல்லாரும் ஓடி வந்து பார்க்கும் போது

ஆத்மா சாந்தியடைந்து மேலே சென்று கொண்டிருக்கிறது

கோப்பை முடிக்க வேண்டுமே என்ற கவலையோடு

காவலர்கள் வருகிறார்கள்

பிரேத பரிசோதனையை நம்பிக் கொண்டு இருப்பவர்களுக்கு

இறந்தவரின் அடையாள அட்டை எண் காணாமல் போகிறது

அட்டை எண் கிடைத்த உடன்

இறப்பிற்கான அதிகாரப்பூர்வ காரணம் வெளியாகக் கூடும்

இறுதி அஞ்சலி நிகழ்வை

தடையில்லாச் சான்று பெற்றுமுடித்துக் கொள்ளலாம்

கனத்தக் கவிதைகளுக்கு அனுமதி இல்லை

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...