10 Apr 2021

முகவர்கள் இருக்கிறார்கள் நிறுவனங்கள் இருக்கின்றன

முகவர்கள் இருக்கிறார்கள் நிறுவனங்கள் இருக்கின்றன

உங்களுக்காகக் குருதி தோய்ந்த வார்த்தையைக்

கூறாமல் இருக்கலாம்

இரத்தக் கவிச்சி அடிப்பதை தடுக்க முடியாது

உங்கள் அனுமதி கேட்பதற்கில்லை

அறுவைச் சிகிச்சைக்கான செலவு

ஒரு நன்கொடையாளருடையது

மருந்துகள் மாத்திரைகள் அனைத்தும்

மானியங்களுக்கு உட்பட்டது

உயிரைக் காப்பதும் எடுப்பதும்

காப்பீட்டின் வரம்புக்குள் நிர்ணயிக்கப்படுவது

இவ்வளவு காலம் வாழ்ந்ததற்காக

நன்றி சொல்லுங்கள்

ஒரு காகிதத்தில் கையெழுத்திட்டு

இனி வாழ முடியாமைக்காக

கருணை கொலைக்காக மனு செய்யுங்கள்

மற்றதை முகவர்கள் பார்த்துக் கொள்வார்கள்

கவலைபடாமல் உயிரை விடுங்கள்

நிறுவனங்கள் இருக்கின்றன பார்த்துக் கொள்ள

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...